DSC09220
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு! – போராட்டத்தில் குதித்த மக்கள்

Share

சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான நிலை உருவானது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கொட்டகலை பிரதேச மக்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டதுடன், கேஸ் சிலிண்டர்களை வீதியில் வைத்து, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என உரத்துக் குரல் எழுப்பினர்.

அத்துடன், நுவரெலியா பகுதிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்ற லொறியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்தனர்.

இதனையடுத்து திம்புள்ள – பத்தனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, கேஸ் லொறியில் இருந்த கேஸ் சிலிண்டர்களில் 60 கேஸ் சிலிண்டர்களை மாத்திரம் இறக்கி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு வழங்கினர்.

சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் நுவரெலிய – ஹட்டன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேபோல் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த வாகன சாரதிகளும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.

DSC09180 DSC09197 DSC09232

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...