Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைவரும் இணங்கும் அரசியலமைப்பு விரைவில்!

Share

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

21ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படுவதையடுத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள், 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது நீதியமைச்சரால் மகாநாயக்க தேரருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

2015ஆம் ஆண்டு 19ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதுடன் அதன்மூலம் ஜனநாயகத்தையும் பலப்படுத்த முடியும்.

அந்தவகையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்கு இடைப்பட்ட நாட்களில் அச் சட்டமூலம் தொடர்பில் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசியல் செய்வதற்கு நாடு ஒன்று அவசியமாகும். அந்த வகையில் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களின்றி ஒன்றிணைவது அவசியம் என்றும் இதன்போது மகாநாயக்க தேரர் நீதியமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...