சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில், அரச உத்தியோகத்தர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் பெற்றோல் முடிவடைந்து விட்டதாக கூறி எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், எரிபொருள் பெற வரிசையில் காத்திருந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினரிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பெற்றோல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment