கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வரும் புதிய களனி பாலத்தில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், அவைநேற்று இரவு ஒளிரவிடப்பட்டுள்ளன.
நாட்டில் தாமரைக்கோபுரத்துக்கு அடுத்ததாக அழகான கட்டமைப்பைக் கொண்ட கட்டுமானமாக இப் பாலம் மிளிர்கிறது,
நாட்டில் முதன்முதலில் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலத்தின் இரு பகுதிகளையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகிய மரங்களை வீதியின் இருபுறமும் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் ;மற்றும் புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கங்கள் ஆகிய பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை, தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment