24 6693cf1316b12
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: பாதாள உலக குழுக்கள் விடுத்துள்ள அச்சுறுத்தல்

Share

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: பாதாள உலக குழுக்கள் விடுத்துள்ள அச்சுறுத்தல்

கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்ற நிலையில் அந்த இடத்தில் மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகத் தலைவரின் புகைப்படம் ஒன்று கட்டபட்டித்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, தெரிவித்துள்ளார்.

மகரகம கொதிகமுவ மயானத்திற்கு முன்பாக உள்ள சுவரிலேயே மாகந்துரே மதுஷின் புகைப்படம் அடங்கிய பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“நமது தலைவர் ஒவ்வொருவரையும் இவ்விடத்திற்கு அனுப்புவார்” என்று அதில் குறிப்பிட்டு KPI என்ற மூன்று ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததாக பாதுகாப்பு பிரிவினர் தகவல் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் மஹரகம மற்றும் தெமட்டகொட பிரதேசத்தில் பாதாள உலக குழுக்களுக்கு இடையில் அச்சுறுத்தல் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டு வருவதாக நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் மஹரகம பமுன்வ தொடருந்து நிலைய வீதியில் உள்ள மதுஷின் மனைவியின் வீட்டுக்கு அருகில் “மதுஷ் சென்ற இடத்திற்கு பாதாள உலகில் உள்ள அனைவரும் தயாராகுங்கள்” மற்றும் “கஞ்சிப்பாணி இம்ரானின் குடும்பத்துக்கும் அதே தண்டனை” என இரண்டு சிறிய சுவரொட்டிகள் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலிலும் தெமட்டகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகையிலும் ஒரே மாதிரியாக எழுதப்பட்ட இரண்டு அச்சுறுத்தல் குறிப்புகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, அச்சுறுத்தும் வகையிலான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மற்றும் அவற்றை காட்சிப்படுத்தியவர்கள் தொடர்பில் மஹரகம மற்றும் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...