202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுன்னாகம் திருட்டு! – சந்தேகநபர் கைது

Share

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 80 கிராம் ஹெரோயின் , திருடப்பட்ட 7 துவிச்சக்கர வண்டிகள் , 4 மின் மோட்டார்கள் , 02 எரிவாயு சிலிண்டர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் அண்மைய நாட்களில் மின் மோட்டார்கள், துவிச்சக்கர வண்டிகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பன திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு குப்பிளான் கம்பம்புலம் பகுதியில் திருட்டு சந்தேக நபர் மறைந்த இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் , அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் புலனாய்வு பிரிவினர் மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...