மாணவர்களுக்கு சீன அரிசி!!

china L

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசியுடன் நேற்று (27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்து அரிசியை இறக்கும் பணி இன்று (28) நிறைவடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக சீனாவினால் இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் இதுவரையில் இலங்கை மாணவர்களுக்கு 8,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version