25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

Share

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக் கூடாது என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், ஆசிய வல்லரசு பிராந்தியத்திற்கு சீனா அச்சுறுத்தல் என்றும் ஆசியாவின் அதிகார சமநிலையை மாற்ற இராணுவ நடவடிக்கைக்கு நம்பகத்தன்மையுடன் தயாராகி வருவதாகவும் தாய்வான் மீது படையெடுப்பதற்கான ஒத்திகைகளை சீனா முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விரைவாக கண்டனத்தை வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சு, சீனாவை கட்டுப்படுத்த தாய்வான் பிரச்சினையை ஒரு பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்தலாமென அமெரிக்கா மாயைகளை வளர்த்துக் கொள்ள எண்ணலாகாது.

அத்தோடு நெருப்புடன் விளையாடவும் கூடாது என்றுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அவதூறான குற்றச்சாட்டுகளால் சீனாவை இழிவுபடுத்தியுள்ளதாகவும் பனிப்போர் மனநிலையை ஊக்குவிப்பதாகவும் பீஜிங் குற்றம் சாட்டியுள்ளது.

தாய்வானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் ஒன்றிணைப்பதாகவும் சீனா கூறியுள்ளது

 

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...