Baby Death
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் போசாக்கு குறைபாட்டால் குழந்தை உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி. அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
55618d90 f52f 11f0 b5f7 49f0357294ff 1
செய்திகள்உலகம்

ஜப்பான் நாடாளுமன்றம் அதிரடியாகக் கலைப்பு! பெப்ரவரி 8-ல் பொதுத்தேர்தல்: பிரதமர் சனே தகாச்சியின் அரசியல் காய்நகர்த்தல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்றே மாதங்களில் நாட்டின்...

IMG 20230111 134430 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழீழ வைப்பக நகைகள் எங்கே? – நாடாளுமன்றத்தில் சிறிதரன் கேள்வி! அரசாங்கத்தின் வாக்குறுதியை நினைவூட்டல்!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, போர்க்காலத்தின் போது...

image 9653c01cae
செய்திகள்இலங்கை

ஓய்வூதியம் என்பது பாதுகாப்பு, சலுகையல்ல: ஜனாதிபதிக்கு கரு ஜயசூரிய அவசரக் கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய...

14 World Day Against Child Labour 1200x834 1
செய்திகள்இலங்கை

2026-க்குள் சிறுவர் உழைப்பற்ற இலங்கை: தேசிய வழிநடத்தல் குழுவின் முக்கிய கூட்டம் நாரஹேன்பிட்டியில்!

இலங்கையில் சிறுவர் பணியாளர்களை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் (National Steering Committee) இந்த...