Sumanthiran
இலங்கைஅரசியல்செய்திகள்

கடிதத்தின் பொருள் மாற்றம்- சுமந்திரன்

Share

தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது

தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை – இந்திய ஒப்பந்தமும்” என மாற்றப்பட்டுள்ளது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. இன்று (22)வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

புதிய வரைவு தயாரிக்கப்பட்டபோது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கின்றது.

இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும். சில ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 6 வெளிநாட்டினர் கைது: விசா விதிமீறல் தொடர்பாக பொலிஸார் விசாரணை

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை, கந்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி...