1617610630 sathosa 2
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் விலைகளில் மாற்றம்!

Share

சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, பருப்பு, கடலை, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு உருளைக்கிழங்கு 395 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 275 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 398 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி கிலோ ஒன்று 174 ரூபாவிற்கும் சம்பா அரிசி கிலோ ஒன்று 220 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கடலை 650 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...