இலங்கைசெய்திகள்

முட்டை விலையில் மாற்றம்

Share
EGG 1
Share

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, தொகுக்கப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.

பொதியிடல் தொடர்பான தீர்மானங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடாகத் தேவையான பரிசீலனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 43 ரூபாவாகவும் சிவப்பு அல்லது பழுப்பு நிற முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்துள்ளது.

இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளின் விலையை தனித்தனியாக 50 ரூபாவாக அதிகரிக்க வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இணங்கியுள்ளதாக அண்மையில் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று (29) முதல் முட்டைகள் தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் முன்மொழிவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொருட்களின் விலைகள் குறித்து விசாரணை நடத்திய பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...