senthil thondaman
அரசியல்இலங்கைசெய்திகள்

இ.தொ.காவின் தலைவராகின்றார் செந்தில் தொண்டமான்!

Share

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார்.

தலைமைப் பதவிக்கு போட்டி எதுவும் நிலவாது எனவும், செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை நாளை (30) கூடவுள்ளது. இதன்போது புதிய தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

தலைமைப் பதவிக்கு ஆரம்பத்தில் இருமுனைப் போட்டி நிலவிவந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு வலுத்ததால், அப்பதவிக்கு போட்டியிடுவதில்லை என மற்றைய தரப்பு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது பதவிகளுக்கான உறுப்பினர் தேர்வு சம்பந்தமான பட்டியலில் இறுதிப்படுத்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...