patali champika ranawaka in parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவின் தவறால் பேரவாவி, நந்திக்கடலாக மாறியுள்ளது! – சம்பிக்க தெரிவிப்பு

Share

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில், கௌரவமாக பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், 43 ஆம் படையணியின் ஸ்தாபகத் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான ‘360’ எனும் அரசியல் நிகழ்வில் பங்கேற்றிருந்த சம்பிக்க ரணவக்க, நாட்டில் நேற்று ஏற்பட்ட சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

“ அமைதிவழியில் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்த பிரச்சினையை, தனது திமிர்தனத்தால் வன்முறைமூலம் தீர்க்க மஹிந்த ராஜபக்ச முற்பட்டதாலேயே, நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.” எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.

“ மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் அனுபவம் இருப்பதால், பேர்டினண்ட் மார்கோஸ்போல அமைதியாக வெளியேறுமாறு நான் கோரியிருந்தேன்.அவ்வாறு இல்லாமால் கடாபிபோல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டால், இறுதியில் அந்த வன்முறைப்பொறிக்குள்ளேயே சிக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டிருந்தேன்.

இவ்விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ச மதிநுட்பத்துடன் செயற்படவில்லை. தவறான வழியையே தேர்வு செய்திருந்தார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது. “ எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை , பிரதமர் பதவியை ஏற்பதற்கு தான் தயாரென அறிவித்த சம்பிக்க ரணவக்க, அதற்காக ஒரிரு நிபந்தனைகளையும் முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து, பொதுவானதொரு வேலைத்திட்டத்துக்கு வந்தால் –

வீடு, வாகனம், கொடுப்பனவு என எவ்வித வரப்பிரதாசங்களையும் அனுபவிக்காமல், நாட்டுக்கு சேவையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்தால் –

இலங்கை மத்திய வங்கி, மின்சார சபை உள்ளிட்ட துறைகள் தொழில்சார் நிபுணர்களின் பயங்களிபுடன் இயங்கினால் –
அதேபோல ஆன்மீகத் தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள், போராட்டக்காரர்கள் எமது நடவடிக்கையை கண்காணிக்க முன்வந்தால் – எந்தவொரு சவாலையும் ஏற்க தயார் என்றார் சம்பிக்க ரணவக்க.

ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தாலும், அக்கட்சியுடன் சம்பிக்க ரணவக்கவுக்கு தற்போது முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் அணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மேதினக்கூட்டத்தில்கூட சம்பிக்க ரணவக்க பங்கேற்கவில்லை. 43 ஆம் படையணியை மையப்படுத்தியதாகவே அவரின் அரசியல் பயணம் தற்போது அமைந்துள்ளது.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...