குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் களுத்துறை புளத்சிங்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கோவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த (வயது–54) என்ற பெண்ணே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதுடன் படுகொலையுடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment