முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை நாட்டிற்கு வருமாறு, அவரின் சகோதர் மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித உறுதியான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த போடட்டும் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பித்து மாலைதீவு சென்றார்.
அங்கு தங்கியிருந்த அவர், ஒரு சில தினங்களில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் அவருக்கு சாதாரண விசாவே வழங்கியிருந்த நிலையில், இங்கிருந்து தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, கோட்டாபயவை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு விடுத்த கோரிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித உறுதியான பதிலும் கிடைக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் வந்து மீண்டும் தங்குவதற்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளும் இல்லை என்று பாதுகாப்பு தரப்பினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment