tamilni 129 scaled
இலங்கைசெய்திகள்

இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண் கொழும்பில் உயிரிழப்பு

Share

இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண் கொழும்பில் உயிரிழப்பு

கொழும்பு-கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இங்கிலாந்து பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (09.09.2023)இடம்பெற்றுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முகப் புத்தகம் ஊடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் அறிமுகமாகி பின்னர் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண் இணையவழியில் முன்பதிவு செய்து அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி தொகுதியில் வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்று கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

குறித்த பெண் நாளை (10) மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில், இன்று அதிகாலை இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பெண் இவ்வாறு தவறுதலான முடிவை எடுத்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...