இலங்கை
சனல் 4 காணொளிக்கு எதிராக கொழும்பு வீதிகளில் போராட்டம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல்-4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சனல்-4வின் சதியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று(07.09.20230 இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருந்ததாக சனல்-4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த ஆவணப்பதிவை எதிர்த்து இன்று தேசியத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கத்தால் அமைதி ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
கடும் மழைக்கு மத்தியிலும் இயக்கத்தின் உறுப்பினர்கள், பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை போஷிக்காதே, சனல்-4க்கு எதிராக எழுந்திரு, சனல்-4வின் சதியை தோற்படிப்போம், நல்லிணக்கத்தை பிரித்தானியா வெறுக்கிறாதா? உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதன் போது, பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக தமது அமைப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவில்லை எனவும் சனல்-4 ஊடகத்தின் நடவடிக்கைகளை மாத்திரம் எதிர்ப்பதாகவும் இயக்கத்தின் உறுப்பினரான உடுகல்லே ஸ்ரீ ஜின்னாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.