24 660b76552e4ce
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை

Share

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை

வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் 2 1/2 Km தூரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஜப்பானிடம் இருந்து சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை ‘Child fund” வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பானிடம் இருந்து இந்த சைக்கிள்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும் தெரியவருகையில், தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது.

இதற்காக, மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஜப்பானிய ‘Childfund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Childfund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...