24 660b3ad373ca7
இலங்கைசெய்திகள்

கோட்டாபய ஆயுதங்களை தூக்காமல் பொறுமை காத்தது ஏன்..! காலம் கடந்து தகவல்

Share

கோட்டாபய ஆயுதங்களை தூக்காமல் பொறுமை காத்தது ஏன்..! காலம் கடந்து தகவல்

அரசாங்கம் வீழ்ச்சியடைந்தாலும் நாடு சீர் குலைவதற்கு அனுமதிக்க முடியாது என்பதாலேயே, 69 இலட்சம் மக்களின் ஆணை இருந்தும் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ச தோட்டாக்கள், ஆயுதங்களால் போராட்டத்தை ஒடுக்கவில்லையென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் கடந்த (30) ஆம் திகதி தங்காலை நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு அரசாங்கம் கவிழ்ந்தால் அதனை மீட்டுவிடலாம், ஆனால் ஆட்சி கவிழ்ந்தால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அதனால்தான், கோட்டாபய ராஜபக்ச போராட்டத்தை ஆயுதங்களால் அடக்கவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, 2015க்குப் பிறகு நியமிக்கப்பட்ட பல அரசாங்கங்கள் நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடையத் தவறிவிட்டன. பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை ஆரம்பித்தோம், ஆனால் அது பல்வேறு சதிகாரர்களால் அழிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அண்மையில், மத்தள விமான நிலையம் தனிமைப்படுத்தப்பட்ட போது நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். சிறை சென்றோம். அதற்காக இப்போதும் மத்தள விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது பற்றி மீண்டும் கலந்துரையாடி வருகின்றோம். நாம் விமான நிலையத்தை அமைத்தமை நெல்லை சேமித்து வைப்பதற்காக அல்ல.

இதேபோன்று துறைமுகம் அமைக்கப்பட்டமை தங்களுடைய சொந்த உடைமை மாற்றத்திற்காக அல்ல. அதிவேக நெடுஞ்சாலை உணவை கொண்டு செல்வதற்காக அமைக்கப்படவில்லை.

முகப்புத்தகத்தில் படங்களை போடுவதற்காக நாங்கள் தாமரை கோபுரத்தை அமைக்கவில்லை. நாட்டின் அபிவிருத்தியை முன்நிலைப்படுத்தியே எமது அரசாங்கத்தின் கீழ் இவற்றை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...