WhatsApp Image 2022 04 13 at 12.59.47 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

சில்லறைத்தனமான அரசியலை பஸில் ஆரம்பித்துள்ளார்! – ஜனாதிபதியும் துணை என்கிறார் விமல்

Share

” நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் துணைபோயுள்ளார்.

எனவே, சாந்த பண்டாரவிடம் இருந்து இராஜாங்க அமைச்சு பதவி பறிக்கப்படும்வரை, நாம் பேச்சுக்கு வரமாட்டோம்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார். இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு.

” சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் எப்படி பேச்சு நடத்துவது?

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு இளைஞர்கள் இடமளிக்கமாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள்.

எனவே, சாந்த பண்டாரவிடமிருந்து அமைச்சு பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டும்தான் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் பேச்சுக்கு தயாரில்லை. எமது பலத்தை நாம் காட்டுவோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...