courts
அரசியல்இலங்கைசெய்திகள்

ஸ்டாலின் உட்பட மூவருக்கு பிணை!

Share

ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் சந்தேகநபர்கள் இன்று(24) நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சம்பவத்தின் சந்தேகநபர்களாக இவர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.

வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...