பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பரமேஸ்வரா சந்தி விபத்தில் இளைஞன் பலி!!

Share

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

03 இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த சிறிய ரக லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் குறித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய 02 இளைஞர்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...