12
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

Share

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வரைவு சட்டமூலத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் உறுப்பினர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை குழுவின் தலைவர் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்காரவால், பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை கிடைத்தவுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு சட்டமூலம் அடுத்த மாதத்திற்குள் தேவையான திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்தில் 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் என திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்படி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது.

சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களை அடையாளம் கண்டு, அந்தத் திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட சட்டமூலத்தை அரசாங்கம் தயாரித்தது.

பின்னர், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, அந்த வரைவு சட்டமூலத்தை மேலும் மேம்படுத்த பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி சட்டத்தரனி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...