296116705 915919316027570 1265306502410148331 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தென்மராட்சி கமக்கார அமைப்புகளுக்கு நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அறிவிப்பு

Share

சாவகச்சேரி ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் சுழற்சியான முறையில் எவ்வித குழப்பமும் இன்றி எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குள் உள்ள கமக்கார அமைப்புக்களுக்கும் பெரும் போக நெற் பயிர்ச்செய்கைக்காக டீசல் விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்பொழுது மழை பெய்திருப்பதால் பெரும்போக நெற்செய்கைக்காக எரிபொருள் இல்லாது விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் அவர்களின் எரிபொருள் தட்டுப்பாட்டினை எம்மால் முடிந்தவரை நிவர்த்தி செய்வதற்கு முன்வந்துள்ளோம்.

அந்தவகையில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் இருக்கும் கமக்கார அமைப்புக்கள் தம்முடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்கள் கமக்கார அமைப்புக்களின் ஊடாக பெரும் போக நெற்பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் என தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரும் விவசாயிகள் தாங்கள் வசிக்கும் கிராம சேவர் பிரிவினை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை மற்றும் QR Code கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு
தாெ.இல-: 0776668739
வைத்திலிங்கம் சிவராசா
நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...