எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளாந்த தேவைகளுக்கான எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் வந்துள்ளதாகவும், நிறுவனம் கூறியுள்ளது. லிட்ரோ நிறுவனம் சந்தைக்கு தேவையான 80 வீதமான எரிவாயுவை விநியோகித்து வருகிறது.
எரிவாயு நுகர்வோர் அதிகார சபையின் தரம் மற்றும் கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் தாமதமின்றி எரிவாயுவை நிறுவனத்தினால் விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment