மைத்திரிபால
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வகட்சி அரசுக்கு சு.க. முழு ஆதரவு! – மைத்திரி தெரிவிப்பு

Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பேச்சுகளை மேற்கொண்டபோது, நாட்டில் சர்வகட்சியொன்றை உருவாக்கினால் மாத்திரமே தாங்கள் உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாடுகள் தெரிவித்தன.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசொன்றை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...