இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது, ஜதராபாத் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,
#SriLankaNews
Leave a comment