உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாகனம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Share

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் அதில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில், ஜெ.ஜெயந்தன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிக்கொண்டு , கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக பயணித்த கப் ரக வாகனம் முள்ளி சந்தி பகுதியில் திருப்ப முற்பட்ட வேளை ,வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

அதன் போது வாகனத்தின் பின்னால் , மணலில் இருந்து பயணித்த குறித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...