1860810 boat
இந்தியாஇலங்கைசெய்திகள்

மர்மமான முறையில் வந்த இலங்கை படகால் பரபரப்பு!

Share

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை சுற்றுலா தலத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த படகை பார்வையிட்டனர். அப்போது அது இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் என உறுதி செய்யப்பட்டது.

அந்த படகின் உள்ளே 2 டீசல் கேன், தண்ணீர் பாட்டில், இலங்கை தின்பண்டங்கள் ஆகியவை இருந்தன. இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர்.

அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. இவர்கள் கடத்தல் தொழிலுக்காக வந்தனரா? அல்லது இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைபர் படகில் 2 டீசல் கேன் இருந்ததால் மணமேல்குடி கோடியக்கரை வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் இணைந்து சென்னை அல்லது கன்னியாகுமரி செல்ல முடியும்.

இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் கோடியக்கரை பகுதியை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கோடியக்கரை வழியாக செல்லும் சாலை முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் மீனவ கிராமங்களுக்கு சென்ற போலீசார் மர்ம ஆசாமிகள் வந்தனரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் இலங்கை பைபர் படகு மர்மமான முறையில் நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...