tZq041UHESi9UHrlqMIC 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மகளுக்கு நஞ்சை பருக்கிய தந்தை!

Share

தந்தை ஒருவர் தனது 20 வயது மகளுக்கு நஞ்சை பருக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் நேற்று முன்தினம் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட  யுவதி  நேற்று முன்தினம் இரவு மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் வேளையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது தந்தை தனக்கு நஞ்சு பருக்கியதாக கூறியுள்ளார்.

அதேசமயம் பாதிக்கப்பட்ட இளம் யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.இதனையடுத்து  உறவினர் வீட்டில் தங்கி இருந்த  தந்தையை  கைது செய்த பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கூறுகையில்,

சம்பந்தப்பட்ட யுவதியின் தாய் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார் எனவும் அத் தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளதோடு மூன்று பேரும் பெண்கள் எனவும் 9 வயது 11வயது 20 வயது உடையவர்கள் என கூறினார்.

இவ்வாறு பெண் பிள்ளைகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டு செல்வதால்  பல குற்ற செயல்கள் இடம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டிய அவர்,  மலையக பகுதிகளில் இருந்து பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு  போவதை பிள்ளைகள் நலன் கருதி  நிறுத்த வேண்டும் எனவும்  கேட்டுக் கொண்டார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...