viber image 2022 07 11 14 42 56 367 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), அவரது மனைவி அனுஜா (35), மகன்கள் பிரசன்னா (10), மேகலட்சன் (8) மற்றும் வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (38), அவரது மனைவி பிரதாம்பிகை (37) ஆகிய 6 பேரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

படகொன்றில் இராமேஸ்வரம் சென்றடைந்த இவர்கள் படகுக்கு 4 லட்சம் ரூபா வழங்கியுள்ளனர்.

அந்த படகு தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 1-ம் மணல் தீடையில் இவர்கள் 6 பேரையும் இறக்கிவிட்டு சென்றுள்ளது. நள்ளிரவில் மணல் தீடையில் தவித்த அவர்களை அந்த வழியாக சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான விரைவு படகு மூலம் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டு கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைக்கு பிறகு மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...