202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிரசன்ன மகன் உள்ளிட்ட 5 பேர் கைது!

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

யுவதி ஒருவருக்கு வாழ்த்து அட்டை பெற்றுக்கொடுத்தமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட, மாகொல வீதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அருகில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணவீரவின் மகனின் காதலி எனக் கூறப்படும் பெண்ணுக்கு வாழ்த்து அட்டை வழங்கிய இளைஞர்மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் வாகனத்திலேயே அவர்கள் பயணித்துள்ளனர். இதற்காக நாட்டு மக்களிடம் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மன்னிப்பு கோரியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...