india
இலங்கைஇந்தியாசெய்திகள்பிராந்தியம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 40 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!

Share

இந்தியா- தமிழகம் மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு பொருட்கள் இருப்பதாக, கியூப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து தேடுதலில் ஈடுபட்ட போது, குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

india 1

இதன்போது வேதாளை தெற்கு தெருவில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 34 மூடைகளில் 1700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சதாம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...