Three people arrested 25465
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை சென்ற 35 பேர் கைது

Share

ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகளை சோதனை செய்த போது பல்வேறு போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கோட்ட குற்றத்தடுப்பு பிரிவக் பொறுப்பதிகாரி பிரேமலால் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பெற்றோர்கள் இன்றி நண்பர்களுடனும் அயலவர்களுடனும் இணைந்து சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்றும் இவர்கள் சுமார் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (18) திகதி கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டிபேரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, ஹோமாகம, பொலன்நறுவை உள்ளிட்ட நாட்டின் பல பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா 50 கிராம், மதன மோதக்க 120 கிராம், 12 போதை மாத்திரை, 500 மில்லிகிராம் ஏஸ் போதைப்பொருள், உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் அனைவரையும் இன்று (19) ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...