202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுற்றிவளைப்பு நடவடிக்கை – 35 பேர் கைது

Share

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (15) நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் இன்று (16) அதிகாலை 1.00 மணி வரை சுமார் 30 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இரண்டு மணிநேரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நடவடிக்கையில் கஞ்சா விற்பனையாளர்கள், பாவனையாளர்கள், திருடர்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 18 பேர் சிக்கியதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த இரண்டு மணித்தியாலங்களுக்குள்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்களையும் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றில் ஆஜராகாத 7 சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...