இலஞ்சம் பெற்ற 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் e1652006548360
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் இலஞ்சம் பெற்ற 3 பொலிஸ் அதிரடி இடமாற்றம்!

Share

யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பொலிஸ் பிரிவுகளுக்கு இ டமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து 10 ஆயிரம் ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரையும் இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸாரையும் விசாரணைக்கு அழைத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொண்ட 10 ஆயிரம் பணத்தைத் திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரதேசங்களில் இலஞ்சம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...