17 20
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Share

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சவை முடிவுகளை இன்றைய தினம் (19.12.2024) அறிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்குத் தீர்வாகப் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...