6 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அடுத்த முப்பது நாட்களில் அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக 3000 மில்லியன் ரூபாய் முதல் 5,000 மில்லியன் ரூபாய் வரை செலவழிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

களனி ரஜமஹா விஹாரையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக நாடு நெருக்கடியில் இருக்கும் போது தேர்தலுக்காக இவ்வளவு பணம் செலவு செய்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கான பணத்தை செலவிட்டே தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் மக்கள் கலந்துகொள்ள செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

இலங்கையின் நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களையும் மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளனர்.

ஆனால் இதனையறியாத அரசியல்வாதிகள் இன்னும் கூட்டத்தை கூட்டுவதற்கு பணத்தை செலவிடுகிறார்கள் என்று ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தேர்தலில் வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய நிதி தொடர்பான கூட்டத்தை தேர்தல் ஆணையகம் அண்மையில் கூட்டியபோது, சஜித் பிரேமதாச. ஒரு வாக்காளருக்கு 250 ரூபாய் வீதம் 4.2 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாக தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவும் 4.2பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளாக தெரிவித்ததாக ஜனக ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச, வாக்காளர் ஒருவருக்கு 300ரூபாய் வீதம் 5.1 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாகவும், அனுரகுமார திஸாநாயக்க 200 ரூபாய் வீதம் 3.4 பில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளதாகவும் இணக்கம் வெளியிட்டனர்.

எனினும் தாம் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் வீதம் 340 மில்லியன் ரூபாயை செலவிட இணங்கியதாக ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரசாரங்களுக்கு 3000 மில்லியன் ரூபா முதல் 5000 மில்லியன் ரூபா வரை செலவு செய்வது நாட்டின் கடனில் பாதியை தீர்த்து வைக்க உதவும் என்று குறிப்பிட்ட ரட்நாயக்க, வரி செலுத்தாத வேட்பாளர்களின் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி உள்ளது என்பதை ஆராய்வது நல்லது என சுட்டிக்காட்டியுள்ளார்

40 வீதமான மக்கள் உணவு வாங்க முடியாத ஒரு நாட்டில், அரசியலுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது அபத்தமானது என்றும் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...