tamilni 57 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்

Share

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்

அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவ்வப்போது சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதன் பின்னணி சமகால ஆட்சியை உறுதிப்படுத்தும் புதிய அணுகுமுறையின் ஆரம்பம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கள பத்திரிகை ஒன்று பசில் ராஜபக்சவுடன் நடத்திய கலந்துரையாடலில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள உண்மைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபச்வுக்கு எதிரான கோஷசங்கள் அரசாங்கத்திற்குள் எழுந்ததாக பசில் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பதவி விலக்குமாறு அதிகளவான அமைச்சர்கள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போராட்டத்திற்கு முன்னரே கணிக்கப்பட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு கோட்டாபய நியமித்தமை சரியானது எனவும், பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு தற்போது ஜனாதிபதியாக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியின் மூலம் தனது அந்த முடிவு சரியானது என நிரூபிக்கப்பட்டதாக பசில் தெரிவித்துள்ளார்.

134 உறுப்பினர்களினதும் வாக்குகளை அவர் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் கட்சி முழுமையாக பசில் ராஜபக்சவின் தலைமை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...