வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்

Share

வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்

பல தாக்குதல்களுக்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண மருத்துவர் குறித்த தகவல்களை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பொருளாதார நெருக்கடியே காரணம் என்றாலும், பொலிஸார் இந்த விடயத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வைத்தியரின் குடும்பம் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சாவியை ஒப்படைத்த பின்னர் இந்த வாரம் வாடகை வீட்டை காலி செய்யும் நிலைக்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை எட்டியுள்ளது.

இந்த வீடு மருத்துவ நிபுணரின் குடும்பத்திற்கு நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஆயுதமேந்திய சிலரால், சொத்துக்களும் வாகனங்களும் பலமுறை சேதப்படுத்தப்பட்டன.

வீட்டின் உரிமையாளருக்கும் மற்றுமொருவருக்கும் இடையிலான குரோதமே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அத்துடன் வீட்டு உரிமையாளர் மரணமான நிலையில் அதற்கான உரிமைக் கோரலும் தீவிரமான நிலையிலேயே தாக்குதல்களும் அதிகரிக்கப்பட்டன.

எனினும் பல முறை முறைப்பாடு அளித்தும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் உரிமையாளரின் குடும்பம் பிரதேச செயலாளரிடம் சாவியை ஒப்படைக்க முடிவு செய்தது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்ததால், அவர்கள் அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...