இலங்கை
யாழ்மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!
மலையகம் 200. மலையக மக்களின் இருபதாவது ஆண்டை நோக்கி சர்வத வழிபாடுகளும் மலையக மக்களின் உரிமைகளும் வலியுறுத்தல்களும். மேற்படி அம்சத்தை முன்வைத்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் அமைதியான முறையில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று.
இந்தப் போராட்டத்தினை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில், அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர என்பதை நினைவு கூர்ந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகளை ஏந்திய பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டனர்.
“மலையக மக்கள் சுதந்திரமாக வாழ காணி வழங்கு”
“மலையக மக்களை சிதைக்க வேண்டாம்”, “பதவிகளுக்கு மலையக மக்களை விற்காதே” , மலையக மக்கள் சுதந்திரமாய் வாழ காணிக்கொடு” தோட்டா வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட வேண்டும்” , வியர்வை விதைத்த பூமி உழைப்பாளர்கள் உரிமையான பூமி”, போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தன்னை தானே செதுக்கியவன்.. நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா - tamilnaadi.com