இலங்கை
நிமோனியா காய்ச்சல் – 7 நாட்களான குழந்தை உயிரிழப்பு!!


காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட ஏழு நாட்களான ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ரவி தாஸ் கவிஷன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்தது.
குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறப்பு விசாரணைகளை மல்லாகம் நீதிமன்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தியிருந்தனர்.