அரசியல்
புதிய அமைச்சர்கள் விரைவில் நியமனம்


தான் உட்பட 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த மாதத்தி் புதிய நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொகுகே, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க மற்றும் தானும் முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் அடங்குவதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.
குறித்த பட்டியல் ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலில் உள்ளவர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்குமாறு பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login