இலங்கைசெய்திகள்

உருளைக்கிழங்குக்கு வரி!!

Share

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகப் பணத்தை முதலீடு செய்து இந்த நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விடயங்களை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முறை உள்நாட்டு உருளைக்கிழங்கு அறுவடையின் போதும், உருளைக்கிழங்கு இறக்குமதியின் காரணமாக விவசாயிகள் உள்நாட்டு உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...