sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் பிரச்சினைகள் அதிகரிப்பு!!

Share

தற்போதைய அரசாங்கம் தவறான கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பதாகவும், இவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்‌ஷ குடும்பம் இந்நாட்டை அழித்து வறிய நிலைக்கு இட்டுச் சென்றதாகவும்,சிறு குழந்தை முதல் முதியவர் வரை, அரச ஊழியர் முதல் கூலித் தொழிலாளி வரை அனைவரினதும் இயல்பு வாழ்க்கை வீழ்ந்துள்ளதாகவும், இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் இனி எந்த ஆட்சியாளருக்கும், தலைவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிமைகள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ராஜபக்‌ஷவின் அடிமைத்தனத்தை இன்னமும் உறுதிப்படுத்தும் மொட்டு – யானை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான முதல் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாணந்துறையில் சனிக்கிழமை (4) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

உலகில் எந்த நாடும் பொருளாதாரத்தை சுருக்கி பிரச்சினைகளைத் தீர்த்ததாக இல்லை எனவும்,தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி நாட்டு மக்களை அழிக்க முயல்வதாகவும்,தேவையை குறைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள் என்றாலும்,அது தவறு எனவும்,இந்த பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதே ஒரே தீர்வு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

2019 இல் ஒரு தவறு செய்யப்பட்டதாகவும், 2023 இல் மக்கள் மற்றொருவருக்குப்   பின்னால் ஓடுவதாகவும்,இந்நாட்களில் பொய் சொல்லி தம்பட்டம் அடிக்கும் புரட்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காது எனவும்,எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் திறன் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடகொரியா,கியூபா போன்ற சோசலிச நாடுகள் எமது நாட்டை கட்டியெழுப்ப உதவாது என்பதால் இதுபோன்ற சோசலிவாதிகளின் பின்னால் செல்ல வேண்டாம் எனவும்,இவ்வாறான சோசலிசவாதிகளின் பின்னால் செல்வதால் நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மேலும் வீழ்ச்சியடையச் செய்யும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...