rtjy 44 scaled
இலங்கைசெய்திகள்

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

Share

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை தற்போது பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான இலங்கை பரீட்சைகள் திணைக்கள பக்கத்தின் G.C.E. (A/L) EXAMINATION – 2022/2023 க்கான பகுதி Enable செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுட்டெண்ணிற்கான பகுதியில் உள்ளீட்டை செலுத்தினால் தடங்களுக்கு மன்னிக்கவும், மீண்டுமொரு முறை முயற்சிக்கவும் என்ற தகவல் காட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

 

Gallery

இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தது.

இதில் 278,196 பாடசாலை மாணவர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதனால், விடைத்தாள் திருத்தும் செயற்பாடு பின்னடைவை சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...