air pollution 6
இலங்கைசெய்திகள்

சீராகும் காற்று மாசு!!

Share

நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (08) காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்த நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவது படிப்படியாக குறைவடைந்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 95 ஐ விட குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 80 ஆகவும், குருணாகலையில் 71 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 51 ஆகவும், வவுனியாவில் 63 ஆகவும், கண்டியில் 94 ஆகவும், கேகாலையில் 83 ஆகவும், காலியில் 43 ஆகவும், இரத்தினபுரியில் 71 ஆகவும், களுத்துறையில் 71 ஆகவும் மற்றும் அம்பாந்தோட்டையில் 83 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் காற்றின் தரச்சுட்டெண் இவ்வாறு பதிவாகி இருந்தது…

பத்தரமுல்லை மற்றும் கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 114 ஆகவும், மன்னாரில் 117 ஆகவும்,

யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...