Bjp Annamalai 16485449363x2 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை!

Share

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப் பட்டினத்தில் இருந்து கடந்த 28ம் திகதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும், 5 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து இலங்கை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

உடனடியாக இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய இணை மந்திரி முருகனிடமும் தெரிவிக்கப்பட்டது. நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்க தமிழக பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், 5 படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முருகனுக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக பாஜக மீனவ சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும். என்று தெரிவித்துள்ளார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...