இலங்கை
கனடாவில் இருந்து உரம்!


கனடாவில் இருந்து 41,876 மெட்ரிக் தொன் மியூரேட் ஓஃப் பொட்டாஷ் Muriate of Potash (MoP) உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று டிசம்பர் 2 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கடனுதவியில் இந்த உரம் பெறப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நெல் விதைத்த அல்லது நடவு செய்த நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு இடையில் MoP பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு பரிந்துரைத்த உரத்தின் அளவு 60 கிலோ. இது 25 மற்றும் 35 கிலோ என இரண்டு பிரிவுகளாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.